![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/27/36040437-sa.webp)
சென்னை,
கடந்த 2022-ம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளிவந்த வதந்தி வெப் தொடரின் மூலம் அறிமுகமானவர் சஞ்சனா. அதன் பிறகு கடந்த ஆண்டு வெளியான 'லப்பர் பந்து' படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.
இவர் நடிகை மட்டுமில்லாமல் மணிரத்னம் இயக்கியுள்ள 'தக் லைப்' படத்தில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் நடிகை சஞ்சனா இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் நாயகனாக கவின் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.