
மும்பை,
ஐ.பி.எல். போட்டியில் கடந்த 2023-ம் ஆண்டு இம்பேக்ட் பிளேயர் விதிமுறை (தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர்) அமல்படுத்தப்பட்டது. பந்துவீச்சு அல்லது பேட்டிங்குக்கு யாராவது ஒரு வீரரை ஆட்டத்தின் ஒரு பகுதியில் மாற்றிக் கொள்ளலாம் என்று இந்த விதி கூறுகிறது. இந்த விதிமுறை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஐபிஎல் அணிகளின் கேப்டன்கள் கூட்டத்தில் இம்பேக்ட் பிளேயர் விதிமுறையை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது அதன்படி இந்த விதிமுறை நீக்கப்படலாம் என தகவல் வெளியானது.இந்த நிலையில் இம்பேக்ட் பிளேயர் விதிமுறை நீடிக்கும் எனவும், 2027 வரை இந்த விதி இருக்கும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது .
ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது..கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன