
சென்னை,
சென்னை தேனாம்பேட்டையில் மருத்துவ சேவைகள் தேர்வு வாரியம் உள்ளது. இந்த வாரியத்தின் தலைவராக உமா மகேஸ்வரி உள்ளார். ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் ராயப்பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இன்று காலை தனது கணவருடன் பாலாஜி நகர் முதல் தெருவில் உமா மகேஸ்வரி நடைப்பயிற்சி சென்றார்.
அப்போது, ஒரு வீட்டில் உள்ள வளர்ப்பு நாய் அவரை 2 முறை கடித்தது. உடனடியாக, மருத்துவமனை சென்று தடுப்பூசி போட்டுக்கொண்ட அவர் வீடு திரும்பினார். நாயின் உரிமையாளரான சுரேஷ் என்பவர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.