இமானுவேல் சேகரன் நூற்றாண்டு பிறந்த நாள் விழா: அமைச்சர்கள், கட்சியினர், பொதுமக்கள் மரியாதை

3 months ago 24

ராமநாதபுரம்: பரமக்குடியில் சுதந்திர போராட்ட வீரர் இமானுவேல் சேகரன் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சுதந்திர போராட்ட வீரர் இமானுவேல் சேகரன் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட உத்தரவிட்டதையடுத்து, அவரது 100-வது பிறந்த நாள் விழா ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு ராமநாதபுரம் ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பால்வளம் மற்றும் கதர் கிராமத்துறை அமைச்சர்ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், இமானுவேல் சேகரனின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Read Entire Article