இமானுவேல் சேகரன் 100வது பிறந்தநாள் விழா: அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை

1 month ago 7

பரமக்குடி: தியாகி இமானுவேல் சேகரனின் 100வது பிறந்தநாள் விழா, அரசு விழாவாக நடத்தப்படும். மேலும், ரூ.3 கோடி மதிப்பீட்டில் அவருக்கு முழு உருவ வெண்கல சிலையுடன் மணி மண்டபம் கட்டப்படும் என, கடந்தாண்டு இமானுவேல் சேகரனின் நினைவுநாளான செப். 11ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனையடுத்து மணி மண்டபம் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து நேற்று, முதன்முறையாக தமிழக அரசின் சார்பில் இமானுவேல் சேகரனின் 100வது பிறந்தநாள், அரசு விழாவாக ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் தலைமை வகித்தார். அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு இமானுவேல் சேகரன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து ரூ.52 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினர். நிகழ்ச்சியில் டெல்லி பிரதிநிதி ஏகேஎஸ்.விஜயன், எம்எல்ஏக்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன், தமிழரசி, சண்முகையா, எம்.பி. நவாஸ்கனி உள்ளிட்டோர் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

The post இமானுவேல் சேகரன் 100வது பிறந்தநாள் விழா: அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை appeared first on Dinakaran.

Read Entire Article