
சிம்லா,
ரஷியாவை சேர்ந்த டேனியல் பார்பர் (வயது 58) இமாச்சலபிரதேசத்திற்கு சுற்றுலா வந்துள்ளார். அவர் கடந்த சனிக்கிழமை குலு மாவட்டம் மணிலாவில் கோதை பகுதியில் சக சுற்றுலா பயணிகள், உள்ளூர் பனிசறுக்கு வீரர்களுடன் இமயமலையில் பனிச்சறுக்கு சாகசத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் டேனியல் பார்பர் சிக்கிக்கொண்டார். இதையடுத்து, அவரை உள்ளூர் பனிச்சறுக்கு வீரர்கள் மீட்டனர். உடனடியாக, ஹெலிகாப்டர் மூலம் மணிலாவில் உள்ள மருத்துவமனைக்கு டேனியல் பார்பர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் டேனியல் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.