3 நாட்களில் ரூ.50 கோடி வசூலை கடந்த "டிராகன்"!

3 hours ago 1

சென்னை,

'லவ் டுடே' படத்தில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிரதீப் ரங்கநாதன் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் நடித்துள்ளார். நேற்று திரையரங்குகளில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் விஜே சித்து, ஹர்ஷத், சினேகா மற்றும் பிரபல இயக்குனர்களான மிஷ்கின் , கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'டிராகன்' படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைத்துள்ளார். கதாநாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன், கயடு லொகர் ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.

'டிராகன்' படம் முதல் நாளில் உலக அளவில் சுமார் ரூ.6 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு பெருகி வருவதால் கூடுதல் திரையரங்குகளும் ஒதுக்கப்பட்ட நிலையில் விடுமுறை நாட்களிலும் இந்த படத்தைக் காண ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு வந்தனர். எனவே இப்படம் வெளியான முதல் மூன்று நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 25 கோடி வரை வசூல் செய்திருப்பதாகவும் உலக அளவில் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Team #ReturnOfTheDragon visited Mythri Vimal Theatre for a fiery success celebration and the energy was unreal, pure fire! Book your tickets for #ReturnOfTheDragon now ️ https://t.co/ajxTAPAp23 #BlockbusterArachakam@pradeeponelife in #ReturnOfTheDragonA @Dir_Ashwathpic.twitter.com/cvMizaRvDX

— AGS Entertainment (@Ags_production) February 24, 2025
Read Entire Article