
ரியோ டி ஜெனிரோ,
பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்ட ரியோ ஓபன் டென்னிஸ் தொடர் பிரேசிலில் நடைபெற்றது. இதில் லீக், காலிறுதி, அரையிறுதி ஆட்டங்கள் முடிவில் பிரான்சின் அலெக்ஸாண்ட்ரே முல்லர் மற்றும் அர்ஜெண்டினாவின் செபாஸ்டியன் பேஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.
அலெக்ஸாண்ட்ரே முல்லர் - செபாஸ்டியன் பேஸ் இடையிலான இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் செபாஸ்டியன் பேஸ் ஆதிக்கம் செலுத்தினார். இறுதியில் 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் அலெக்ஸாண்ட்ரே முல்லரை வீழ்த்தி செபாஸ்டியன் பேஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.