இமாசல பிரதேசம்: சர்வதேச போதை பொருள் கும்பலுடன் தொடர்பு; 6 பேர் கைது

1 day ago 4

சிம்லா,

இமாசல பிரதேச போலீசார் போதை பொருளுக்கு எதிராக தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இதில், காங்ரா மாவட்டத்தில் உள்ள நுபுர் போலீசார், சர்வதேச போதை பொருள் கும்பலுடனான தொடர்பு பற்றி விசாரணை நடத்தினர்.

இதில், 6 பேர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து ஹெராயின் என்ற போதை பொருளையும் பறிமுதல் செய்தனர். இவர்களுக்கு துபாயில் உள்ளவர்களுடன் தொடர்பு இருப்பதும், குற்றவாளிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதுதவிர, ரூ.4.9 லட்சம் பணம், 67.93 கிராம் தங்கம், 95.45 கிராம் வெள்ளி, 2 மொபைல் போன்கள் மற்றும் 2 ஆயுள் காப்பீட்டு பத்திரங்கள் (ரூ.4.5 லட்சம் பிரீமியம் கொண்டது) ஆகியவையும் கடந்த ஆண்டில் கைப்பற்றப்பட்டன.

நடப்பு ஆண்டில் ககன் சர்னா என்பவரின் வீட்டில் நடந்த சோதனையில், ரூ.1.15 கோடி பணம், 125 கிராம் தங்கம் மற்றும் 4 கிராம் வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது என போலீசார் தெரிவித்தனர். அவற்றுடன் 2 கார்கள், சொத்து பத்திரங்கள் மற்றும் பிற ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு உள்ளன.

இந்த வழக்கில் இதுவரை ரூ.3 கோடி மதிப்பிலான சட்டவிரோத சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன என போலீசார் கூறுகின்றனர். தொடர்ந்து, நிதி முறைகேடுகள் பற்றி விசாரணை நடந்து வருகிறது.

Read Entire Article