அதை புரிந்து கொண்டு செயல்பட்டால் இருநாடுகளுக்கு இடையே போர் என்பதே தேவையில்லை - நடிகர் விஷால்

3 hours ago 2

மதுரை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். இவர் இன்று காலை மதுரையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதன்பின்னர், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது கோவிலுக்கு வந்த பொதுமக்கள் அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

அதனை தொடர்ந்து நடிகர் விஷால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் தேவையில்லாதது, அதை தவிர்த்து இருக்கலாம். நம்மையும், நாட்டையும் பாதுகாக்கும் ராணுவ வீரர்கள் உயிரிழக்கும்போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. எல்லா நாட்டிற்கும் எல்லைகள் போடப்பட்டுள்ளது. அதை புரிந்து கொண்டு செயல்பட்டால் இருநாடுகளுக்கு இடையே போர் என்பதே தேவையில்லை." என்று தெரிவித்துள்ளார்.

Read Entire Article