இபிஎஸ், சீமான் தரம் தாழ்ந்து விமர்சிப்பதை நிறுத்த வேண்டும்: டிடிவி எச்சரிக்கை

2 months ago 11

தென்காசி: தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:  நடிகர் விஜய் கட்சி துவங்கலாம், ஆனால் வெற்றி பெற முடியாது என்று ரஜினியின் அண்ணன் கூறியுள்ள கருத்து தனி நபர் கருத்து. எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை குறித்து விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கூறியிருக்கலாம்.

ஆனால், முதலில் அவர் மற்றவர்களை தரம் தாழ்ந்து விமர்சிப்பதை நிறுத்தி தனக்குத் தானே கட்டளையிட்டுக் கொள்ள வேண்டும். விஜய் கட்சி ஆரம்பித்து இருப்பதால் யாருக்கு பாதிப்பு என்பது 2026ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகுதான் தெரிய வரும். சீமான் உணர்ச்சி மிகுதியால் விஜய் குறித்து மட்டுமல்ல, பல அரசியல் கட்சித் தலைவர்களையும், மறைந்த தலைவர்களையும் விமர்சிப்பது வருத்தப்படும்படியாக உள்ளது. அவர்தான் அதனை சரி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post இபிஎஸ், சீமான் தரம் தாழ்ந்து விமர்சிப்பதை நிறுத்த வேண்டும்: டிடிவி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article