ஈரோடு, மே 16: கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை சரக காவல் சரகத்தில் 24 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் கடத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், திருப்பூர் மாவட்டம் என்எஸ்டீ சிறப்பு பிரிவுக்கும், மலையம்பாளையம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தன், திருப்பூர் மாவட்டம் குடிமங்களம் காவல்நிலையத்திற்கும், புளியம்பட்டி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சுப்புரத்தினம் நீலகிரி மாவட்டம் மசினகுடி காவல்நிலையத்திற்கும், அறச்சலூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ராஜகண்ணன் நீலகிரி மாவட்டம் செரம்பாடி காவல்நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜபிரபு, திருப்பூர் மாவட்டம் அவினாசி காவல்நிலையத்திற்கு இன்ஸ்பெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுதவிர, ஈரோடு மாவட்டத்தில் எஸ்ஐயாக பணியாற்றி இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்ற ராம்பிரபு கடத்தூர் காவல்நிலையத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோன்று, சேலம் மாவட்டத்தில் எஸ்ஐயாக இருந்த செந்தில்குமார், கொடுமுடி காவல்நிலைய இன்ஸ்பெக்டராகவும், சென்னை அடையார் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில பணியாற்றிய தேவி ஈரோடு அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டராகவும், நீலகிரி மாவட்டம் ஊட்டி டவுன் நிலைய இன்ஸ்பெக்டர் முரளிதரன், பங்களாபுதூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டராகவும், செரம்பாடி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் துரைபாண்டி அறச்சலூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கோவை சரக டிஐஜி சசிமோகன் பிறப்பித்துள்ளார்.
The post இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் appeared first on Dinakaran.