இன்ஸ்டாகிராமில் பழக்கம்; 10 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த 16 வயது சிறுவன்

6 months ago 16

ஆரவல்லி,

குஜராத்தின் ஆரவல்லி மாவட்டத்தில் தன்சுரா கிராமத்தில் வசித்து வரும் பெற்றோர் போலீசில் புகார் ஒன்றை அளித்தனர். அதில், அவர்களுடைய 5-ம் வகுப்பு படிக்கும் மகள் கடத்தப்பட்டு இருக்கிறாள் என தெரிவித்தனர்.

இதுபற்றி தொழில்நுட்ப உதவியுடன் விசாரணை மேற்கொண்டு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் சிறுமியின் பெற்றோரிடம் விசாரித்தபோது, தாயாரின் நவீன மொபைல் போனில் சிறுமி இன்ஸ்டாகிராமை பயன்படுத்தியது தெரிய வந்நதுள்ளது.

இதில், 16 வயது சிறுவன் ஒருவனுடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் சாட்டிங் செய்ததுடன், செல்போனிலும் பேசி வந்துள்ளனர்.

இந்நிலையில், சிறுமியை கடத்தி சென்ற அந்த சிறுவன், வீட்டுக்கு கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான் என போலீசார் தெரிவித்தனர்.

அந்த சிறுமி மற்றும் சிறுமியின் மைனர் சகோதரி என இருவரும் பெற்றோரின் மொபைல் போனில் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வந்துள்ளனர். அவர்கள் 7 கணக்குகளை உருவாக்கி வைத்துள்ளனர். எனினும், அதில் 2 மட்டும் செயல்பாட்டில் இருந்துள்ளது.

அந்த சிறுவன் மெஹ்சானா பகுதியில் உள்ள சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். சிறுவர் சீர்திருத்த சட்டத்தின்படி சிறுவனுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என போலீசார் தெரிவித்தனர்.

Read Entire Article