இன்றைய ராசிபலன் - 10.02.2025

14 hours ago 2

இன்றைய பஞ்சாங்கம்

பிப்ரவரி 10

கிழமை: திங்கட்கிழமை

தமிழ் வருடம்: குரோதி

தமிழ் மாதம்: தை

நாள் : 28

ஆங்கில தேதி: 10

ஆங்கில மாதம்: பிப்ரவரி

வருடம்: 2025

நட்சத்திரம்: இன்று மாலை 7.12 வரை புனர்பூசம் பின்பு பூசம்

திதி : இன்று இரவு 8.08 வரை திரயோதசி பின்பு சதுர்த்தசி

யோகம்: அமிர்த, சித்த யோகம்

நல்ல நேரம் காலை: 9.30 - 10.30

நல்ல நேரம் மாலை: 4.30 - 5.30

ராகு காலம் காலை: 07.30 - 09.00

எமகண்டம் காலை: 10.30 - 12.00

குளிகை மாலை : 1.30 - 3.00

கௌரி நல்ல நேரம் காலை: 1.30 - 2.30

கௌரி நல்ல நேரம் மாலை: 7.30 - 8.30

சூலம்: கிழக்கு

சந்திராஷ்டம்: கேட்டை, மூலம்

இன்றைய ராசிபலன்

மேஷம்

பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும். குழந்தைக்காக காத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு கர்ப்பம் தரிக்கும் யோகம் உண்டாகும். சொந்த வீடு வாங்க முயற்சித்தவர்களுக்கு இடம் பார்க்க செல்வீர்கள். அது தங்களுக்கு பிடித்தபடி அமையும். தம்பதிகளின் ஒற்றுமைக்கு குறை இருக்காது.

அதிர்ஷ்ட நிறம்: கரும் பச்சை

ரிஷபம்

ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். வி.ஐ.பிகளுக்கு நெருக்கமாவீர்கள். குடும்பத்தில் நல்லது நடக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்

மிதுனம்

வீண் வறட்டு கௌரவத்திற்காக சேமிப்புகளைக் கரைத்துக் கொண்டிருக்காதீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து அத்தியாவசியத்தை மட்டும் செய்யப்பாருங்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். தாங்கள் விரும்பிய காரியத்தை முடிக்க தன்னம்பிக்கையும், துணிச்சலும் வரும்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

கடகம்

பெண்களுக்கு மாமியார் வழி உறவினர்கள் நட்பு பாராட்டுவர். எதிர்காலத்திற்காக ஒரு தொகையை சேமிப்பீர்கள். வீட்டுக் கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். குடும்பத்தின் அடிப்படை பொருளாதாரத்தை மேம்படுத்த சில திட்டங்கள் தீட்டுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

சிம்மம்

வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். அவர்களுடன் நட்புறவாக பழகுங்கள். நீங்கள் யாரையும் தேடிச் சென்று பார்க்கும் இயல்பில்லாதவர். ஈகோவை பார்க்க வேண்டாம். தங்களுக்கு வேண்டும் என்றால் நாம்தான் அணுக வேண்டும். என்பதை புரிந்து கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் :வான் நீலம்

கன்னி

பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்து விலகும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வீட்டினை அழகுபடுத்துதல் மற்றும் கூடுதல் அறை அல்லது தளம் அமைக்கும் பணிகளில் வேகமடைவீர்கள். எதிர்பாராத பயணங்களால் தங்களுக்கு பெரும் தொகை கிடைக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

துலாம்

எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். அரசியலில் செல்வாக்குக் கூடும். புது வேலைக் கிடைக்கும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். திடீர் யோகம், பணவரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி எல்லாம் உண்டாகும். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

விருச்சிகம்

திருமணமாகாத தலையர்களுக்கும் கன்னியர்களுக்கும் நல்ல வரன் கிட்டும். தொழிலதிபர்களுக்கு எதிர்பார்க்காத லாபத்தை எதிர்கொள்வீர்கள். கணவன் மனைவியிடையே புரிதல் உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். உடல்நலம் ஆரோக்கியமாகும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

தனுசு

இன்று மூலம் நட்சத்திரக்காரருக்கு சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: கிரே

மகரம்

பிள்ளைகளால் நற்பெயரும் கௌரவமும் அதிகமாகும். உடல் நிலையில் அவ்வப்போது சிறுசிறு தொந்தரவுகள் ஏற்பட்டு பின் சரியாகும். வம்பு, வழக்குகளில் நீங்கள் குற்றமற்றவர் என நிரூபணமாகும். அரசு வழிகளில் ஆதாயம் உண்டாகும். மாணவர்கள் உயர் படிப்பு படிக்க வெளிநாடு செல்வர்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கும்பம்

உத்யோகத்தில் சம்பள உயர்வுக்குண்டான செய்தி கிடைக்கும்.குடும்பத் தலைவிகளை மதிக்கப்படுவீர்கள். உடலில் கை, கால், மூட்டு வலி வந்து போகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் மதிப்பார்கள். குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் செல்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

மீனம்

திட்டவட்டமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. அரசியலில் செல்வாக்கு உயரும். உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் வரும்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

Read Entire Article