
இன்றைய பஞ்சாங்கம்:-
ஏப்ரல் மாதம் 8ம் தேதி
குரோதி வருடம் பங்குனி 25ம் தேதி செவ்வாய்க்கிழமை
நட்சத்திரம்: இன்று காலை 11.18 வரை ஆயில்யம் பின்பு மகம்
திதி: இன்று அதிகாலை 12.12 வரை தசமி பின்பு ஏகாதசி
யோகம்: சித்த யோகம்
நல்ல நேரம் காலை: 7.30 - 08.30
நல்ல நேரம் மாலை: 4.30 - 5.30
ராகு காலம் மாலை: 3.00 - 4.30
எமகண்டம் காலை: 9.00 - 10.30
குளிகை மாலை: 12.00 - 1.30
கௌரி நல்ல நேரம் காலை: 10.30 - 11.30
கௌரி நல்ல நேரம் மாலை: 7.30 - 8.30
சூலம்: வடக்கு
சந்திராஷ்டம்: பூராடம், உத்திராடம்
ராசிபலன்:-
மேஷம்
புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். உடல் நலம் நன்றாக இருக்கும். புதிய வாகனம் வாங்கி விடும் யோகம் உண்டாகும். பெண்கள் வீட்டை அழகுபடுத்துவீர்கள் . தம்பதிகளிடையே ஒற்றுமைக்கு குறைவில்லை. உடல் உழைப்பு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வான் நீலம்
ரிஷபம்
பணத்திற்கு குறைவு ஏற்படாது. நிலப்பதிவு செய்வீர்கள்.சமூகத்தில் மதிப்பு கூடும். அரசியல்வாதிகளின் எண்ணம் பலிக்கும்.
சொத்துப் பிரச்சினை தீரும். சேமித்த பணத்தில் பொன்நகை வாங்குவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பர் . வியாபாரத்திற்காக வெளியூர் பயணம் செய்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
மிதுனம்
உத்யோகஸ்தர்கள் பணியிடத்தில் செல்வாக்குடன் திகழ்வர். தொழிலதிபர்கள் தொழிலாளர் ஆதரவுடன் வளர்ச்சி காண்பர். உடல்நிலையில் பாதிப்பு வராது. மனம் உற்சாகமுடன் இருக்கும். தம்பதிகள் ஒற்றுமையாக நடந்து கொள்வர். பங்குச் சந்தையால் பணம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
கடகம்
பெற்றோர்களின் உடல் நலம் சிறக்கும். ஆன்மீகப் பணிகள் சிறக்கும். மனைவி வீட்டாரிடம் நல்லுறவு ஏற்படும். ஏஜென்ட்களுக்கு லாபம் கிடைக்கும். குடும்பத்தலைவிகளுக்கு பணப்புழக்கம் நன்றாக இருக்கும். பட்டா மாற்றுதல் நடைபெறும். மனை வாங்கும் முயற்சி வெற்றியாகும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரே
சிம்மம்
பெண்களுக்கு கணவர் வீட்டாரின் நன்மதிப்பைப் பெறுவர். மாணவர்கள் கல்வி வளர்ச்சி கண்டு பெற்றோர் மகிழ்வர். வியாபாரிகள் வங்கி நிதி உதவியால் முதலீட்டை அதிகப்படுத்துவர். அரசியல்வாதிகள் மாற்றுக்கட்சியினராலும் மதிக்கப்படுவர். விவசாயிகள் விளைச்சல்களை அதிகரிக்கச் செய்வர். தேகம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
கன்னி
புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். பூர்வீகச் சொத்து கைக்கு வந்தடையும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலை உண்டாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த நேரம் கைகொடுக்கும். யாரிடமும் விதண்டாவாதம் செய்ய வேண்டாம். தொழிலில் மேன்மை நிலை உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
துலாம்
வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும் வீடு நிலம் சம்பந்தப்பட்ட தொழில் சிறப்படையும்.பேச்சில் நகைச்சுவைத் தன்மை அதிகரிக்கும் பண வரவு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நல்ல தகவல் வந்து சேரும் குழந்தைகளால் சந்தோஷம் உண்டாகும் உடல்நிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை
விருச்சிகம்
வெளிநாட்டு ஒப்பந்தம் மூலம் லாபம் கூடும். அரசியல்வாதிகளுக்கு மக்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். விவசாயிகள் நவீன கருவி மூலம் பணியை மேம்படுத்துவர். மாணவர்கள் படிப்பில் முன்னேறுவர். பணப்புழக்கம் அதிகரிக்கும். நண்பர்களை சந்திப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்
தனுசு
தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: கரும் பச்சை
மகரம்
மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு ஆர்டர்கள் கிடைக்கும். பிரபலங்களின் நட்பு பலப்படும். புதிய வீடு உற்சாகத்தினைத் தரும்.
நெடுந்தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் திட்டமிட்டுப் படித்து சிறப்பர். கணவன் மனைவியிடையே அன்பு மேலோங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்
கும்பம்
பணம் பல வழியிலும் வந்து சேரும். அரசியல்வாதிகள் தலைமையின் இணக்கத்திற்கு உரியவராவர். பெண்கள் கணவரின் அன்புக்குரியவராக விளங்குவர். மாணவர்களின் ஞாபகத்திறன் அபாரமாக செயல்படும். இயன்ற உதவியைப் பிறருக்குச் செய்வீர்கள். பெண்களின் சேமிப்புஉயரும். சுபநிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தேறும்-
அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்
மீனம்
நல்ல விசயங்களில் திருப்பம் கிடைக்கும். திருமணத் தடைகள் நீங்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கப் பெறுவீர்கள். வருவாய் திருப்தியளிக்கும். வீடு கட்டும் யோகம் உண்டாகும் .தங்கள் தேவை நிறைவேறும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழிலில் ஆர்வம் கூடும். வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
