இன்றைய ராசிபலன் - 03.10.24

3 months ago 27

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் புரட்டாசி மாதம் 17-ம் தேதி வியாழக்கிழமை

நட்சத்திரம்: இன்று மாலை 04-19 வரை அஸ்தம் பின்பு சித்திரை

திதி: இன்று அதிகாலை 12-34 வரை அமாவாசை பின்பு பிரதமை

யோகம்: சித்த யோகம்

நல்ல நேரம் மாலை: 10.45 - 11.45

ராகு காலம் பிற்பகல்: 1.30 - 3.00

எமகண்டம் காலை: 6.00 - 7.30

குளிகை காலை : 9.00 - 10.30

கௌரி நல்ல நேரம் காலை: 12.15 - 1.15

கௌரி நல்ல நேரம் மாலை: 6.30 - 7.30

சூலம்: தெற்கு

சந்திராஷ்டம்: அவிட்டம், சதயம்

இன்றைய ராசிபலன்:

மேஷம்

பெற்றோரின் கனவு பலிக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்கள் உதவுவர். பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். பற்று வரவு வசூலாகும். உடல் நலனில் கவனம் வேண்டும். நீண்ட நாள் வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள். வெளி உணவுகளை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

ரிஷபம்

அனைத்து பணிகளையும் முடித்து விட்டு தாங்கள் அலுவலகத்தில் நிம்மதி பெருமூச்சுவிடுவீர்கள். குடும்பத் தலைவிகள் வீட்டிற்கு தேவையான அத்தியாசிய பொருள்களை வாங்குவர். கலைஞர்களுக்கு வரவேண்டிய மீதித் தொகை வந்து சேரும். கணவன், மனைவி ஒற்றுமை இருப்பர். வியாபாரம் செழிப்புறும்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

மிதுனம்

பிள்ளைகளின் செயல்களில் கவனம் தேவை. உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். இருப்பினும் வேலையை குறித்த நேரத்தில் முடித்துக் காட்டுவீர்கள். பிள்ளைகள் தங்கள் சொல்படி நடப்பர். கணவனிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. உடல் நலம் தேறும். நட்பு வட்டம் விரிவடையும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கடகம்

தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். இருவரும் ஒருவொருக்கொருவர் புரிந்து கொள்வர். உத்யோகஸ்தர்கள் தாங்கள் கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். சகோதர வகையில் உதவிகள் உண்டு. தேகத்தில் உற்சாகம் வெளிப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

சிம்மம்

தம்பதிகள் வெளியிடங்களுக்குச் செல்வர். குழந்தைகளுக்கு உடல் நலம் முன்னேற்றம் ஏற்படும். அக்கம் பக்கத்தாரின் உதவி கிடைக்கும். பெண்கள் வீட்டினை தாங்கள் அழகுபடுத்தி மகிழ்வீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் உள்ள சிக்கல்கள் நீங்கும். அக்கம் பக்கத்தாரிடம் நட்பு பலப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

கன்னி

வரவேண்டிய பணம் இன்று வசூலாகும். உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வும் பாராட்டும் சலுகைகள் கிடைக்கும். கல்யாணம், கிரகப் பிரவேசத்தில் கலந்து கொண்டு முதல் மரியாதையைப் பெறுவீர்கள். இரவில் நீண்ட தூர பயணத்தை தவிர்க்கவும். பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும். வியாபாரத்தில் பணவரவு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

துலாம்

தொழிலதிபர்களுக்கு வேலையாட்கள் தங்கள் சொல்படி நடப்பர். சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட மனஸ்தாபம் விலகும். வியாபாரம் செழிப்படையும். வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். அரசு டென்டர் போன்றவைகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவர்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

விருச்சிகம்

சமூக ஆர்வலர்களுக்கு மக்கள் செல்வாக்கு கூடும். உறவினர்கள் வருகை இல்லத்தில் மகிழ்ச்சியைத் தரும். மாணவர்களின் நினைவாற்றல் கூடும். தேக ஆரோக்கியம் சிறக்கும்.

தம்பதிகளிடையே புரிதல் அதிகரிக்கும். உத்யோகஸ்தர்களுக்கு வீட்டுக் கடன் கிடைக்கும். உடல் வலிமை உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

தனுசு

மனைவி உங்களுடைய தவறுகளை சுட்டிக் காட்டினால் கோபப்படாமல் அமைதியை கையாளவும். வாகனத்திற்கு அதிக செலவு ஏற்படக்கூடும். உத்யோகஸ்தர்கள் தங்கள் பணியில் கவனம் செலுத்துவீர்கள். மாணவர்கள் பகுதி படிப்பில் சேருவர். தந்தைவழி சொத்து கைக்கு வரும்.

அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை

மகரம்

அரசியலில் நாட்டம் ஏற்படும். எதிரிகள் தங்கள் தவறை உணர்வர்.ஜவுளி வியாபாரிகளுக்கு நல்ல லாபம் அதிகரிக்கும். அழகு நிலையங்கள் ஆரம்பிக்க திட்டமிடுவீர்கள். தம்பதிகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும். பெண்கள் சிக்கன நடவடிக்கையை மேற்கொள்வது அவசியம். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.

அதிர்ஷ்ட நிறம்: வான் நீலம்

கும்பம்

இன்று அவிட்டம், சதயம் நட்சத்திரகாரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

மீனம்

நடைபாதை வியாபாரிகளுக்கு அதிக வாடிக்கையாளர்கள் கிடைப்பர். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெண்கள் ஆலய வழிபாடுகளில் ஈடுபடுவர். உடல் நலம் சிறக்கும். கணினி துறையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். மார்கெட்டிங் பிரிவினர் அதிக ஆர்டர்கள் பெறுவர். நண்பர்கள் ஒற்றுமையுடன் இருப்பர்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

 

Read Entire Article