இன்றைய திராவிட மாடலுக்குப் பாதை அமைத்த நீதிக்கட்சி உருவான நாள் இன்று :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

1 month ago 6

சென்னை : உரிமை மறுக்கப்பட்ட மக்களின் குரலாய்ப் பிறந்த நீதிக்கட்சி வாரிசுகளாய், நமது உரிமைகளை மீட்டெடுத்து நிலைநாட்டும் பயணத்தில் உழைப்பைச் செலுத்திடுவோம் வென்றிடுவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில்,

“வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் எனும் உரிமையை வழங்கிச் சமூகநீதிப் புரட்சி,

இலவசக் கட்டாயக் கல்வி மற்றும் காலை உணவுத் திட்டத்தை முன்னோடியாகத் தொடங்கிக் கல்விப் புரட்சி,
இந்து சமய அறநிலையச் சட்டம் மூலம் சமத்துவப் புரட்சி

– என நூறாண்டுகளுக்கு முன்பே இன்றைய திராவிட மாடலுக்குப் பாதை அமைத்த நீதிக்கட்சி உருவான நாள் இன்று!

உரிமை மறுக்கப்பட்ட மக்களின் குரலாய்ப் பிறந்த நீதிக்கட்சி வாரிசுகளாய், நமது உரிமைகளை மீட்டெடுத்து நிலைநாட்டும் பயணத்தில் உழைப்பைச் செலுத்திடுவோம்! வென்றிடுவோம்!,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நீதிக்கட்சி என்பது இந்தியாவில் 1916ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி மருத்துவர்கள் சி.நடேசன், டி.எம்.நாயர் மற்றும் வழக்கறிஞர் பி.டி.ராஜன், சர் பிட்டி தியாகராயர் ஆகியோரால் சென்னையில் நிறுவப்பட்ட அரசியல் கட்சியாகும். தமிழ்நாட்டின் சமூக – அரசியல் விழிப்புணர்வில் இக்கட்சி முக்கிய பங்கு வகித்தது. சமூக நீதி மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் உரிமைகளுக்காக இக்கட்சி குரல் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

The post இன்றைய திராவிட மாடலுக்குப் பாதை அமைத்த நீதிக்கட்சி உருவான நாள் இன்று :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு appeared first on Dinakaran.

Read Entire Article