இன்று மற்றும் நாளையும் திருச்செந்தூர் வருவதை தவிர்க்கவும்: மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள்

2 months ago 13

தூத்துக்குடி: கனமழை காரணமாக, திருச்செந்தூர் கோயிலுக்கு வருவதை 2 நாட்களுக்கு பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் வேண்டுகோள் விடுத்துள்ளார். வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் கடந்த 2 நாட்களாக அதிகனமழை பெய்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் 2-வது நாளாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தற்போது ஆற்றில் 56 ஆயிரம் கன அடி நீர் சென்றுகொண்டிருக்கிறது. தாமிரபரணி ஆறு, காட்டாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

வெள்ளத்தால் தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலை, நெல்லையில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வழியாக திருச்செந்தூர் செல்லும் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் திருச்செந்தூர், ஏரல்-திருச்செந்தூர் சாலையும் மழை வெள்ளத்தால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. திருச்செந்துர் சாலைகளில் வெள்ளநீர் செல்வதால், மாற்று பாதைகளில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கனமழை காரணமாக, திருச்செந்தூர் கோயிலுக்கு வருவதை 2 நாட்களுக்கு பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் வேண்டுகோள் விடுத்துள்ளார். மழை, வெள்ள சூழலை கருத்தில் கொண்டு 2 நாட்களும் கோயிலுக்கு வருவதை வெளியூர் பக்தர்கள் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post இன்று மற்றும் நாளையும் திருச்செந்தூர் வருவதை தவிர்க்கவும்: மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Read Entire Article