இன்று புனித வெள்ளி: தேவாலயங்களில் சிலுவைப்பாடு நிகழ்ச்சி

4 weeks ago 5

கிறிஸ்தவர்களின் தவக்காலம் கடந்த மாதம் 5-ம் தேதி சாம்பல் புதன் நிகழ்வுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் தமிழக தேவாலயங்களில் பிரார்த்தனை, ஆராதனை போன்ற நிகழ்வுகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில், நேற்று புனித வியாழன் கடைபிடிக்கப்பட்டது. இன்று புனித வெள்ளி நாளாகும். அதாவது, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை நினைவு கூரும் வகையில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. புனித வெள்ளி என்பது கிறிஸ்தவர்களுக்கு துக்க நாளாகும். மக்களுக்காக இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த தியாகத்தை நினைவுகூறும் நாள். எனவே, இன்றைய தினம் பல தேவாலயங்களில் இயேசு கிறிஸ்துவின் மரணத்தை நினைவு கூறும் வகையில் சிலுவைப்பாடு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

குறிப்பாக, நாகை மாவட்டம் வேளாங்கண்ணி, சென்னை, திருச்சி, கோவை, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் புனித வெள்ளி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறப்பதற்கு முன்பு அவர் கூறிய 7 வார்த்தைகளை மையப்படுத்தி தேவாலயங்களில் பிரார்த்தனைகள் நடந்து வருகின்றன. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட 3-வது நாளில் உயிர்தெழுந்தார். அன்றைய தினத்தை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் நாளாக கொண்டாடி மகிழ்கின்றனர். அந்த வகையில், வரும் ஞாயிற்றுக்கிழமை (20-ந் தேதி) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 

Read Entire Article