மதுரை, ஜன. 10: 2024-25ம் ஆண்டு கூட்டுறவுத்துறை மானியக்கோரிக்கையின்போது, கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், மதுரை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வகை சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கான நாள் நிகழ்வு இன்று (ஜன.10) நடக்கிறது.
இதன்படி இன்று காலை 10.30 மணியளவில் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகத்தில் மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மற்றும் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் / மேலாண்மை இயக்குநர் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறும்.
இதில் அனைத்து வகை சங்கங்களில் பணியாற்றுவோர் மற்றும் ஓய்வு பெற்றோர் தங்கள் பணி மற்றும் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்து, அவற்றுக்கு விதிகளுக்குட்பட்டு தீர்வு காணலாம். எனவே, இந்நிகழ்வில் கலந்து கொண்டு பணியாளர்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். இவ்வாறு மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சு.சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
The post இன்று நடைபெறுகிறது கூட்டுறவு சங்க பணியாளர் நாள் நிகழ்வு கூட்டம்: மண்டல இணைப்பதிவாளர் தகவல் appeared first on Dinakaran.