இன்று ஒரே நாளில் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு: பயணிகள் கலக்கம்

3 weeks ago 6

டெல்லி: ஏர் இந்தியா, இண்டிகோ, விஸ்தாரா, ஆகாசா நிறுவனங்களைச் சேர்ந்த 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. இந்திய விமான நிறுவனங்களுக்கு கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் நாள்தோறும் வந்தபடி உள்ளன. 170க்கும் மேற்பட்ட விமானங்கள் வெடிகுண்டு அச்சுறுத்தல்களால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே இது தொடர்பாக பேசிய ஒன்றிய அமைச்சர் ராம்மோகன் நாயுடு; வெடிகுண்டு மிரட்டல் குறித்து புலனாய்வு அமைப்புகள் மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது.

நாங்கள் விமான நிலையங்களில் பாதுகாப்பு அம்சத்தை மேம்படுத்துகிறோம். இது எந்த விதமான பயத்தையும், பீதியையும் பரப்ப வேண்டிய தருணம் அல்ல. மக்கள் பயப்பட வேண்டாம். ஒன்றிய அரசு தேவையான அனைத்து நடடிக்கைகளையும் எடுத்து வருகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்கிறார். இந்நிலையில் ஏர் இந்தியா, இண்டிகோ, விஸ்தாரா, ஆகாசா நிறுவனங்களைச் சேர்ந்த 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.

ஒன்றிய அமைச்சர் விளக்கம் அளித்த நிலையில், அடுத்த சில மணி நேரங்களிலேயே வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பயணிகள் பீதி அடைந்துள்ளனர். சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று ஒரேநாளில் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பயணிகள் கலக்கம் அடைந்தனர்.

The post இன்று ஒரே நாளில் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு: பயணிகள் கலக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article