இன்று அரசிலயமைப்பு மீது விவாதம் அவை சுமுகமாக நடப்பதை நாங்கள் உறுதி செய்வோம்: சபாநாயகரிடம் ராகுல் வாக்குறுதி

1 month ago 3

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், தொழிலதிபர் அதானி லஞ்ச விவகாரம் குறித்து விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இந்த விவகாரத்தை திசை திருப்பும் விதமாக காங்கிரஸ் தலைமைக்கும் அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரசுக்கும் தொடர்பிருப்பாக பாஜ எம்பிக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குறித்து பாஜ எம்பி நிஷிகாந்த் துபே அவதூறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

இதனால் நாடாளுமன்றத்தில் தினந்தோறும் கடும் அமளி ஏற்பட்டு, இரு அவைகளும் முடங்கி வருகின்றன. நிஷிகாந்த் துபே கருத்தக்களை ஆய்வு செய்து அவற்றை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டுமென மக்களவை காங்கிரஸ் துணைத்தலைவர் கவுரவ் கோகாய் ஏற்கனவே சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதற்கிடையே, அரசியலமைப்பு குறித்த விவாதம் மக்களவையில் இன்று தொடங்கி 2 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவை, ராகுல் காந்தி நேற்று நேரில் சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
என் மீதான அவதூறு கருத்துக்களை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டுமென எனது கட்சி விரும்புகிறது. அதை சபாநாயகரிடம் தெரிவித்தேன். அவற்றை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். பாஜ எம்பிக்கள் எங்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வருகிறார்கள். அவர்கள் எனக்கு எதிராக என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். அவர்களை விடுங்கள்.

அவை 100 சதவீதம் செயல்பட நாங்கள் அனுமதிப்போம். நாளை (இன்று) அரசியலமைப்பு மீதான விவாதம் நடைபெற வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். பாஜ எம்பிக்கள் எங்களை ஆத்திரமூட்ட நினைத்தாலும் அவர்களை அனுமதிப்போம். அவையை நடத்த முயற்சிப்போம் என்றார்.

The post இன்று அரசிலயமைப்பு மீது விவாதம் அவை சுமுகமாக நடப்பதை நாங்கள் உறுதி செய்வோம்: சபாநாயகரிடம் ராகுல் வாக்குறுதி appeared first on Dinakaran.

Read Entire Article