இன்னிங்ஸ் 122 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது இங்கிலாந்து சாதித்த ஆஸ்திரேலியா

1 week ago 2

மெல்போர்ன்: இங்கிலாந்து மகளிருடனான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி, ஒரு இன்னிங்ஸ் 122 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று மகளிர் ஆஷஸ் கிரிக்கெட் தொடருக்கான கோப்பையை கைப்பற்றியது. ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்றுள்ள இங்கிலாந்து மகளிர் அணி ஒரு டெஸ்ட் போட்டி மட்டும் கொண்ட தொடரில் மோதியது. முதலல் ஆடிய இங்கிலாந்து 170 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதன் பின் முதல் இன்னிங்சை ஆடிய ஆஸி மகளிர் அதிரடியாக ஆடி 440 ரன் குவித்தனர். அனபெல் சதர்லேண்ட் 163, பெத் மோனி 106 ரன்களை வேட்டையாடினர்.

இதைத் தொடர்ந்து 2வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து மகளிர் 3ம் நாளில் 148 ரன்னுக்கு ஆல் அவுட்டாகினர். இதனால், ஒரு இன்னிங்ஸ் 122 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி, மகளிர் ஆஷஸ் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது. அந்த அணிக்கு தொடருக்கான வெற்றிக் கோப்பை பரிசாக அளிக்கப்பட்டது. ஆட்ட நாயகியாக அனபெல் சதர்லேண்டும், தொடர் நாயகியாக அலானா கிங்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஏற்கனவே நடந்த ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களிலும் இங்கிலாந்து அணியை ஆஸி மகளிர் அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post இன்னிங்ஸ் 122 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது இங்கிலாந்து சாதித்த ஆஸ்திரேலியா appeared first on Dinakaran.

Read Entire Article