நன்றி குங்குமம் டாக்டர்
இன்றைய நாளில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படாத குடும்பங்களே இல்லை எனக் கூறலாம். அந்தளவிற்கு குடும்பத்தில் ஒருவர் அல்லது இருவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளது. சர்க்கரை நோய் சிகிச்சைக்கு உணவு கட்டுப்பாட்டை தவிர, ஆயுர்வேத தீர்வுகளும் நல்ல பலன் தரும். அந்தவகையில், சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க, திரிபலா சூரணம் உதவுகிறது. திரிபலாவின் நன்மைகளை பார்ப்போம்.
திரிபலா
திரிபலா சூரணம் சித்த மருத்துவத்தில் முக்கியமான பங்கு வகிக்கிறிது. நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சேர்ந்த கலவையே திரிபலாவாகும். இது சர்க்கரை நோய்க்கும், மலச்சிக்கலுக்கும் சிறந்த தீர்வைத் தருகிறது. மேலும், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், மூட்டுவலி ஆகியவை வராமலும் தடுக்கிறது. கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இந்த மூன்றிலும் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் இருப்பதால் இதனை அனைவருமே பயன்படுத்தலாம். இது ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. திரிபலா கணையம் ஆரோக்கியத்தை மேம்படுத்தி இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
திரிபலா உட்கொள்ளும் முறை:
சுத்தமான நெய்யில் திரிபலாவை கலந்து சாப்பிடலாம். இது குடல் மற்றும் குடல்களின் சுவர்களை சுத்தப்படுத்துகிறது மற்றும் உடலில் இருந்து அவற்றின் மேற்பரப்பில் ஒட்டிக்கொண்டிருக்கும் தீங்கு விளைவிக்கும் பொருட்களை நீக்குகிறது. உடலில் உள்ள நச்சுகளை நீக்கவும் உதவுகிறது. இதனால் ரத்த ஓட்டம் சீராகி சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.
திரிபலாவை மோரில் கலந்து குடித்தால், உடல் நலம் பெருகும். இந்த செய்முறை பாட்டி கலாத்திலிருந்தே இருந்துவருகிறது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் செரிமானமும் ஆரோக்கியமாக இருக்கும். நீரிழிவு நோயாளிகள் மதிய உணவுக்குப் பிறகு 1 டம்ளர் மோரில் 1 தேக்கரண்டி திரிபலா கலந்து குடித்து வரலாம்.
1 தேக்கரண்டி திரிபலாவை 1 டம்ளர் வெதுவெதுப்பான நீருடன் கலந்து இரவில் குடித்து வர, சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.
தொகுப்பு: பொ.பாலாஜி கணேஷ்
The post இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கும் திரிபலா ! appeared first on Dinakaran.