திருச்சி: திருச்சி பஞ்சப்பூரில் ரூ.408 கோடியில் செலவில் கட்டப்பட்டுள்ள கலைஞர் ஒருங்கிணைத்த பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். விமான நிலையத்துக்கு இணையாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து முனையத்தில் இருந்து பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டன. அதன்பின், திருச்சி பஞ்சப்பூரில் ரூ.236 கோடி செலவில் 22 ஏக்கரில் அமையவுள்ள அமைய உள்ள காய்கறி அங்காடிக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். பின்னர் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்;
இது பஞ்சப்பூர் அல்ல.. எல்லா ஊரையும் மிஞ்சப்போகும் மிஞ்சும்பூர் என்று கூறினார். மேலும், திருச்சிக்கும் திராவிட தலை மகன்களுக்கும் நிறைய தொடர்பு உள்ளது. பெரியார் பிறந்தது ஈரோடு என்றாலும் அவர் மாளிகை கட்டி வாழ்ந்தது திருச்சி. இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தியது திருச்சியில்தான். தலைவர்களுக்கு சிலை அமைக்க வேண்டியது நமது கடமை மட்டுமல்ல, சிறு நன்றிக்கடன்.
அரசு பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம் என்று கூறினார் அன்பில் மகேஸ். ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவில் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்று வருகின்றனர். குறுகிய காலத்திலேயே 100க்கணக்கான மாணவர்கள் அரசு மாதிரி பள்ளியில் படித்து உயர்கல்விக்கு சென்றுள்ளனர். நான் முதல்வன் திட்டத்தில் 68 மாணவர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்படுகிறது. காலை உணவு திட்டத்தின்கீழ் 86000 குழந்தைகள் சூடான, சுவையான உணவு சாப்பிடுகின்றனர். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் திருச்சியில் 4.42 லட்சம் பேர் 1000 வாங்குகிறார்கள். திருச்சி மாவட்டத்துக்கு திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் பின்வருமாறு;
*ரூ.26,000 கோடி மெகா திட்டங்கள் திருச்சிக்கு மட்டுமே தரப்பட்டுள்ளது.
*திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், அண்ணா கனரக வாகன சரக்கு முனையம்
*திருச்சியில் 22 ஏக்கர் பரப்பளவில் காய்கறி அங்காடி அமைக்கப்பட உள்ளது.
*திருச்சியில் காமராஜர் பெயரில் பிரமாண்ட நூலகம் உருவாகி வருகிறது.
*ரூ.18 கோடியில் பறவைகள் பூங்கா அமைய உள்ளது.
*சர்வதேச ஒலிம்பிக் அகாடமி, ஜல்லிக்கட்டு அரங்கம், பச்சமலை சுற்றுலா திட்டம், ரூ.3 கோடி மதிப்பிட்டில் ஜல்லிக்கட்டு அரங்கம்.
*1100 ஏக்கர் பரப்பளவில் மணப்பாறையில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும்.
*மணப்பாறை சிப்காட் தொழில் பூங்கா மூலம் 10000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
*ரூ.400 கோடி மதிப்பிட்டில் டைடல் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.
*70,000 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்க ரூ.4160 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.
*கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 4000 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது .
அரசின் சாதனைகளை பட்டியலிட்டு முதல்வர் உரை:
*ஒத்த செங்கலோடு நிற்கும் எய்ம்ஸ் மாதிரி இல்லாமல், சொன்ன தேதிக்கு முன்பே கட்டி முடிக்கப்பட்டது கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை.
*ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பெருமித அடையாளங்களை உருவாக்கி வருகிறோம்.
*பொருளாதாரத்தில் 9.69 விழுக்காடு என்பது தமிழ்நாடு இதுவரை பார்க்காத வளர்ச்சி.
*தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் 5ல் ஒரு பங்கு தமிழ்நாட்டில்தான் உள்ளது. மக்களை தேடி மருத்துவம்
*திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி ஐநா விருதை பெற்றுள்ளோம்.
*சமூக நீதி அரசை உருவாக்கி உள்ளோம். எல்லோருக்குமான ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி நாட்டுக்கே எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
*விவசாயிகள் எதிர்த்த 3 வேளாண் சட்டங்களுக்கு அதிமுக ஆட்சி ஆதரவு அளித்தது.
*4 ஆண்டுகளில் சரிவில் இருந்து நம்பர் ஒன் மாநிலமாக சாதனை படைத்தோம். இதை விட பெரிய சாதனைகளை படைப்போம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
The post இனிமே நம்ம போற பாதை சிங்க பாதை.. திருச்சி மாவட்டத்துக்கு மட்டும் ரூ.26,000 கோடியில் திட்டங்கள்: பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.