ஜகர்த்தா,
இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி ஜகர்த்தாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் லக்ஷயா சென், ஜப்பானின் கென்டா நிஷிமோட்டோ உடன் மோதினார்.
இதில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றிய நிலையில், 3-வது செட்டை நிஷிமோட்டோ கைப்பற்றி வெற்றி பெற்றார். இந்த ஆட்டத்தில் லக்ஷயா சென் 16-21, 21-12, 21-23 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி கண்டு வெளியேறினார்.