பணி: Constable (Driver): 545 இடங்கள். (பொது- 209, எஸ்சி-77, எஸ்டி-40, ஒபிசி-164, பொருளாதார பிற்பட்டோர்-55).
சம்பளம்: ரூ.21,700- 69,100.
வயது: 06.11.2024 அன்று 21 முதல் 27க்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: குறைந்த பட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி பெற்று உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
உடற்தகுதி: குறைந்தபட்சம் 170 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். மார்பளவு சாதாரண நிலையில் 80 செ.மீ., அகலம் இருக்க வேண்டும். 5 செ.மீ., சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.
எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஆண்கள் குறைந்த பட்சம் 162.5 செ.மீ., உயரமும், மார்பளவு சாதாரண நிலையில் 76 செ.மீயும் இருக்க வேண்டும். 5 செ.மீ., சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும். அனைத்து விண்ணப்பதாரர்களும் உயரத்திற்கேற்ற எடை மற்றும் ஆரோக்கியமான உடற்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
ITBP ஆல் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, ஓட்டுனர் திறன் தேர்வு, உடல் திறன் தேர்வு, உடற்தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். கேள்விகள் 10ம் வகுப்பு தகுதி அடிப்படையில் கேட்கப்படும். கேள்விகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் அமைந்திருக்கும்.
உடற்திறன் தேர்வில் 1.6 கி.மீ., தூரத்தை 6½ நிமிடங்களில் ஓடிக் கடக்க வேண்டும். விண்ணப்பதாரரின் உயரம், உடல் எடை பரிசோதிக்கப்படும்.
கட்டணம்: பொது/ ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.100/-. எஸ்சி/எஸ்டி/ முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.11.2024.
The post இந்தோ-திபெத் போலீஸ் படையில் 545 டிரைவர்கள் appeared first on Dinakaran.