இந்தியை திணித்து தமிழை அழிக்க ஒன்றிய அரசு நினைக்கிறது; ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் ஆளுநர் பதவிக்கு ஏற்றதல்ல: முத்தரசன் கண்டனம்

4 hours ago 1

சென்னை: இந்தியை திணித்து தமிழை அழிக்க ஒன்றிய அரசு நினைக்கிறது என்றும் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் ஆளுநர் பதவிக்கு ஏற்றதல்ல என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தும் பெரும் தேவை உள்ளது. தென் தமிழ்நாட்டின் பல்வேறு கல்வி நிறுவன மாணவர்களுடன் கலந்துரையாடியதாக ஆளுநர் ரவி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இருமொழிக் கொள்கையால் தென் தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை இழந்தவர்களாக உணர்கின்றனர். இந்தியை எதிர்க்கிறோம் என்ற பெயரில் தென்மாநில மொழிகளை கூட படிக்க அனுமதிக்கப் படாதவர்களாக உணர்கிறார்கள். மொழியை படிப்பதற்கான தேர்வு நமது இளைஞர்களுக்கு இருக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ரவி, ஆர்.எஸ்.எஸ்.ரவியாகவே செயல்படுகிறார் என முத்தரசன் விமர்சனம் செய்துள்ளார். அதில்,

இந்தி கட்டாயமா? – ஆளுநர் விளக்க வேண்டும்

தமிழ்நாட்டில் வேலைதேடிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் குறித்து ஆளுநர் தவறான கருத்தை தெரிவித்துள்ளார். இந்தியை திணித்து தமிழை அழிக்க ஒன்றிய அரசு நினைக்கிறது. ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் ஆளுநர் பதவிக்கு ஏற்றதல்ல.

ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம் தீவிரமடையும்

ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாட்டில் போராட்டம் மேலும் மேலும் தீவிரமடையும்என தெரிவித்தார்.

The post இந்தியை திணித்து தமிழை அழிக்க ஒன்றிய அரசு நினைக்கிறது; ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் ஆளுநர் பதவிக்கு ஏற்றதல்ல: முத்தரசன் கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article