இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுமா? டிரம்ப் சொன்ன சூசக தகவல்

5 hours ago 1

வாஷிங்டன்,

அமெரிக்கா மீது பல்வேறு நாடுகள் அதிக வரிகள் விதிப்பதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். இதையடுத்து இந்தியா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கடந்த ஏப்ரல் 2-ந்தேதி பரஸ்பர வரிகளை விதித்து அறிவித்தார். அதன்பின் சீனாவை தவிர மற்ற நாடுகள் மீதான கூடு தல் வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.

அதற்குள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதையடுத்து இந்தியா உள்பட பல நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. இதற்கிடையே டிரம்ப் விதித்த காலக்கெடு நாளையுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் முதற் கட்டமாக 14 நாடுகளுக்கு கூடுதல் வரிகளை டிரம்ப் விதித்துள்ளார். இது தொடர்பான கடிதங்கள் அந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதன்படி மியான்மர், லாவோஸ் ஆகிய நாடுகளுக்கு 40 சதவீத வரி விதிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக டிரம்ப் கூறியதாவது:-

நாங்கள் பல்வேறு நாடு களுக்கு அவர்கள் எவ்வளவு வரிகளை செலுத்த வேண்டும் என்று கூறி கடிதங்களை அனுப்பி உள்ளோம். சில நாடுகள் தங்களுக்கு இருக்கும் பிரச்சினையை தெரிவித்தால், அதைப் பொறுத்து சிறிது வரி குறைப்பு செய்யப் படும்.தற்போது 14 நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டு உள்ளது. இந்த 14 நாடுகளு டன் வர்த்தக பற்றாக்குறை உள்ளது. ஆனாலும் வர்த்த கத்தை தொடர விரும்புகி றோம். அதே வேளையில் அமெரிக்காவை சீண்டும் வகையில் பதிலுக்கு இந்த நாடுகள் வரி விதித்தால் மீண்டும் வரி உயர்த்தப்படும்.

நாங்கள் இங்கிலாந்து மற்றும் சீனாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தம் செய்து உள்ளோம். இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வதில் நெருக்கத்தில் இருக்கிறோம். இது தொடர்பாக அறிவிப்பு விரைவில் வெளியாகும். மற்றவர்களை நாங்கள் சந்தித்து பேசினோம். ஆனால் அவர்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்ய முடியும் என்று நாங்கள் நினைக்க வில்லை.எனவே நாங்கள் அவர்களுக்கு வரி விதிப்பு தொடர்பாக கடிதம் அனுப்பினோம் என்றார். இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கான நெருக்கமான சூழலில் இருப்பதாக டிரம்ப் கூறியிருப்பதால் விரைவில் இருநாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் எனத்தெரிகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத்தெரிகிறது.

Read Entire Article