இந்தியாவுக்கு எதிராக சதித் திட்டம் சென்னையில் இளைஞர் கைது: என்ஐஏ நடவடிக்கை

1 month ago 7

சென்னை: தடை செய்யப்பட்ட ‘ஹிஸ்புக் தஹ்ரீர்’ அமைப்புக்கு ஆதரவாக இந்தியாவில் இருந்து காஷ்மீரை விடுவிக்க பாகிஸ்தானிடம் ராணுவ உதவியை நாடிய தீவிரவாத நபரை என்ஐஏ அதிகாரிகள் சென்னையில் கைது செய்தனர். சென்னை ராயப்பேட்டையில் முன்னாள் அண்ணா பல்கலைக்கழக கவுரவ பேராசிரியர் ஹமீது உசேன் என்பவர், ‘டாக்டர் ஹமீது உசேன் டாக்ஸ்’ என்ற பெயரில் நடத்திய யூடியூப் மூலம் தடை செய்யப்பட்ட ‘ஹிஸ்புக் தஹ்ரீர்’ அமைப்புக்கு ஆதரவாக இளைஞர்களை மூளை சலவை செய்து ஆட்கள் சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ராயப்பேட்டை ஜான் ஜானிகான் சாலையில் உள்ள ஹமீது உசேன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தியபோது தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆட்கள் சேர்ந்து வந்ததற்கான ஆவணங்கள் சிக்கின. அதைதொடர்ந்து ஹமீது உசேன், அவரது தந்தை அகமது மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான் ஆகியோரை உபா சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

பிறகு அவர்களிடம் நடத்திய விசாரணையில் முகமது மவுரிஸ்(36), காதர் நவாஸ் ஷெரிப்(35), முகமது அலி உமரி(46) என அடுத்தடுத்து 6 பேர் கைது ெசய்யப்பட்டனர். இந்த வழக்கு சென்னை பெருநகர காவல்துறையில் இருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ)வுக்கு மாற்றப்பட்டது. அதனை தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் தமிழ்நாடு முழுவதும் 12 இடங்களில் சோதனை நடத்தி வழக்கு தொடர்பான முக்கிய அவணங்கள் கைப்பற்றினர். பின்னர் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பென் டிரைவ், லேப்டாப், சிம்கார்டுகள் மற்றும் ஆவணங்களை வைத்து விசாரணை நடத்திய போது, இந்தியாவில் இருந்து காஷ்மீரை விடுவிக்க பாகிஸ்தானிடம் இருந்து ராணுவ உதவியை நாடியதற்கான முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. ைகது செய்யப்பட்ட 6 பேரும் ‘வன்முறை ஜிகாத்’ மூலம் இந்திய அரசை கவிழ்க்க முக்கிய நோக்கமாக செயல்பட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து தடை செய்யப்பட்ட ‘ஹிஸ்புக் தஹ்ரீர்’ அமைப்புக்கு ஆதரவாக இந்தியாவில் சதித்திட்டம் தீட்டியதாக பேராசிரியர் ஹமீது உசேன் நண்பரான பைசுல் ரஹ்மான் என்பவர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ‘ஹிஸ்புக் தஹ்ரீர்’ அமைப்பின் சித்தாந்தத்தை பல குழுக்களுடன் பல ரகசிய கூட்டங்களை இளைஞர்கள் மத்தியில் நடத்தி வந்ததும், தமிழகம் முழுவதும் பிரிவினைவாத பிரசாரங்களை இவர் கையில் எடுத்து நடத்தியதும் உறுதியானது. அதைதொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் பைசுல் ரஹ்மானை நேற்று முன்தினம் ெசன்னையில் கைது செய்தனர்.

The post இந்தியாவுக்கு எதிராக சதித் திட்டம் சென்னையில் இளைஞர் கைது: என்ஐஏ நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article