
டெல்லி,
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இந்த ராணுவ நடவடிக்கையின்போது இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது.
இந்த சண்டையில் ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த மோதல் தொடர்பாக சீன அரசு ஊடகமான குளாபல் டைம்ஸ் , துருக்கி அரசு ஊடகமான டிஆர்டி வேல்ட் போன்றவை பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டது. ஆதாரமற்ற செய்திகளை இரு ஊடகங்களும் வெளியிட்டன. மேலும், இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் செய்திகளை வெளியிட்டன.
இதனை தொடர்ந்து இந்தியாவில் குளோபல் டைம்ஸ் மற்றும் டிஆர்டி வேல்ட் ஊடகங்களில் எக்ஸ் பக்கங்களை மத்திய அரசு இன்று காலை முடக்கியது. இந்நிலையில், முடக்கப்பட்ட குளோபல் டைம்ஸ் எக்ஸ் பக்கம் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. அதேபோல் டிஆர்டி வேல்ட் எக்ஸ் பக்கமும் தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இரு ஊடக தளங்களின் எக்ஸ் பக்கங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு தற்போது நீக்கியுள்ளது. இதனால், இரு ஊடகங்களின் எக்ஸ் பக்கங்களும் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.