21 நாட்களில் 31 நக்சலைட்டுகள் படுகொலை: அமித்ஷா பாராட்டு

4 hours ago 4

புதுடெல்லி,

சத்தீஷ்கார்-தெலுங்கானா எல்லையில், கர்ரேகுட்டா ஹில்ஸ் பகுதியில் மிக பெரிய அளவில் நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் முக்கியம் வாய்ந்த 31 நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளனர். நக்சலைட்டுகள் இல்லாத பாரதம் என்ற உறுதிமொழியில் வரலாற்று சாதனை படைத்து இருக்கிறோம் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டு உள்ளார்.

இதற்காக சி.ஆர்.பி.எப்., எஸ்.டி.எப். மற்றும் டி.ஆர்.ஜி. வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், 21 நாட்களில் இந்த பெரிய சாதனையை பாதுகாப்பு படையினர் முடித்துள்ளனர் என்றும் கூறினார். 2026-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் நக்சலைட்டுகள் இல்லாத இந்தியா உருவாக்கப்படும் என நான் மீண்டும் நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன் என அவர் கூறியுள்ளார். இந்த 31 பேரில் 28 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

Read Entire Article