வாஷிங்டன்: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் ஐபோன்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள் அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என்று மீண்டும் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். “இந்தியாவிலோ அல்லது வேறு எங்கும் தயாரிக்கப்பட்டோ அமெரிக்காவுக்கு ஐபோன்கள் ஏற்றுமதி
செய்யப்படுவதை விரும்பவில்லை. அமெரிக்காவில் ஐபோன்களை தயாரிக்குமாறு ஆப்பிள் நிறுவன சி.இ.ஓ. டிம் குக்கிடம் ஏற்கனவே கூறினேன்” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
The post இந்தியாவில் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் ஐபோன்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவிப்பு appeared first on Dinakaran.