
மும்பை,
ஆப்பிள் நிறுவனம் தற்போது விலை உயர்ந்த டைட்டானியம் புரோ மாடல் உள்பட அனைத்து வகையான ஐபோன்களையும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்து வருகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரையிலான 12 மாதங்களில், ஆப்பிள் இந்தியா நிறுவனம், இந்தியாவில் 2,200 கோடி டாலர் மதிப்புள்ள ஐபோன்களை உற்பத்தி செய்துள்ளது. இது, முந்தைய 12 மாதங்களுடன் ஒப்பிடுகையில் 60 சதவீதம் அதிகம். இதன் மூலம், ஐபோன் உற்பத்தியாளர் மற்றும் அதன் வினியோகஸ்தர்கள் சீனாவில் இருந்து இந்தியாவின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பி இருப்பது தெளிவாகி உள்ளது.