இந்தியாவில் ஐபோன் உற்பத்தி அதிகரிக்கும் - ஆப்பிள் நிறுவனம்

6 hours ago 2

வாஷிங்டன்,

அமெரிக்கா, சீனா நாடுகள் ஏற்றுமதி வரியை பரஸ்பரமாக உயர்த்தியுள்ளன. இதனால் இருநாடுகளுக்கு இடையே வர்த்தக போர் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட ஐபோன் நிறுவனம், சீனாவில்தான் தனது நிறுவன போன்களை பெருமளவு உற்பத்தி செய்தது.

ஆனால் சீனா, அமெரிக்கா இடையே வர்த்தகப்போர் தொடங்கிய நிலையில் சீனாவில் ஐபோன் உற்பத்திக்கான வாய்ப்பு குறைந்து உள்ளது. இந்தநிலையில் ஐபோன்கள் உற்பத்தியை இந்தியாவில் அதிகரிக்க அதன் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் முடிவு செய்துள்ளார்.

அவர் கூறுகையில், "இனி அமெரிக்கர்கள் கைகளில் தவழ உள்ள ஐபோன்களின் பிறப்பிடமாக இந்தியா இருக்கும்" என்றார். இதனால், ஐபோன் நிறுவனத்தின் முதலீடு இந்தியாவில் அதிகரிக்கும் எனவும் வேலை வாய்ப்பும் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article