இந்தியாவில் அடுத்த ஆண்டு உலக தடகளப் போட்டி

6 months ago 25

புதுடெல்லி,

இந்தியாவில் அடுத்த ஆண்டு உலக தடகளப் போட்டி நடைபெறவுள்ளது என்று இந்திய தடகள சம்மேளனம் (ஏ.எப்.ஐ) அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய தடகள சம்மேளனம் (ஏ.எப்.ஐ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

இந்தப் போட்டியானது ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி நடைபெறும். உலகத் தடகளப் போட்டியாக இது இருந்தாலும் இந்தியாவில் நடைபெறும் பிரிவானது வெண்கலப் பதக்கங்களுக்கான போட்டியாக மட்டுமே இருக்கும்.

இந்தியாவில் உலகத் தடகளப் போட்டியானது 1980-களின் இறுதியிலும், 1990-களின் தொடக்கத்திலும் இதற்கு முன்பு நடைபெற்றது. பல ஆண்டுகளுக்குப் பிறகு உலகத் தடகளப் போட்டியின் ஒரு பிரிவு இந்தியாவில் நடைபெறவுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article