கோவை: கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 2024 – 2025-ம் கல்வியாண்டிற்கான 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். அப்போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய SSA நிதி தொடர்பான கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலளித்தார்.
அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியதாவது:
மாணவர்கள் தங்கள் படிப்பின் மீது முழு கனவனத்தையும் செலுத்த வேண்டும். தடை எதுவாக இருந்தாலும் நமது முதலமைச்சர் அதனை பார்த்துகொள்வார். தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய SSA நிதி ரூ.573 கோடி முதல்தவணையாக வராமல் உள்ளது. அந்த தவணைக்கான ஆசிரியர்கள், பணியாளர்கள் என 32,298 நபர்களுக்கு ஊதியம் வராமல் உள்ளது. அதனை ஒன்றிய அரசு இன்றளவும் தராமல் இருப்பதால், அதனை தமிழ்நாட்டின் நிதியில் இருந்து கொடுப்பதாக அறிவித்துள்ளார். ஆனால் தொடர்ந்து ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியை பல்வேறு காரணங்களை கூறி நிறுத்திவிடகூடாது, அதனை முழுமையாக வழங்க வேண்டும் என்ற அழுத்தையும், வலியுறுத்தலையும் தொடர்ந்து பள்ளிகல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் வைத்து வருகின்றனர். அதுவரைக்கும் தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலம், சுமார் 27 வகையான பள்ளிகல்வித்துறை சார்ந்த பயன்பாடுகள் SSA நிதி சார்ந்து இருக்கிறது.
மலைபிரதேசங்களில் குழந்தைகளை பள்ளிகளுக்கு அழைத்து செல்லவும், சிறப்பு குழந்தைகளின் கல்வி, ஒவ்வொரு பள்ளிகள் சார்ந்து கலை,பண்பாட்டுகூட்டங்களை நடத்துவதாக இருந்தாலும், எண்ணும் எழுத்தும் திட்டம், ஹைடெக் லேப் ஆகிய அனைத்தும் 60:40 விகித்தத்தில் ஒன்றிய அரசுடன், தமிழ்நாடு அரசும் சேர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திடீரென ஒன்றிய அரசு நிதியை நிறுத்துகிறது. ஒன்றிய அரசு வலியுறுத்தும் 20 காரணிகளில் தமிழ்நாடு அரசு சுமார் 18-ல் முதல் இடத்தில் உள்ளது. இந்த நிலையில், சில கொள்கைகளை சேர்த்தால் மட்டுமே நிதி அளிக்கப்படும் என்பது எந்த விதத்தில் நியாயம் என்பதை ஊடகத்துறை மூலமாக கேட்டுகொள்கிறேன்.
தமிழ்நாடு முதலமைச்சரை பொறுத்த வரையில் பள்ளிகல்வித்துறைக்கு அதிகப்படியான நிதியை ஒதுக்கியுள்ளார். பள்ளிகல்வித்துறை என்பது அடுத்த தலைமுறையை உருவாக்ககூடிய துறை. இதனை என்றும் மாநில அரசு கைவிடாது என கூறியுள்ளார்.
The post இந்தியாவிலேயே பள்ளிக்கல்விதுறையில் சிறப்பா செயல்படுற மாநிலத்துக்கு தீடீர்னு நிதியை நிறுத்துனா எப்படி..? அமைச்சர் அன்பில் மகேஸ் appeared first on Dinakaran.