இந்தியாவிற்கு நாங்கள் யார் என்று நேற்று இரவு காட்டிவிட்டோம் - பாகிஸ்தான் பிரதமர்

14 hours ago 3

இஸ்லாமாபாத்,

'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இன்று நள்ளிரவு 01.44 மணி அளவில் இந்தியாவின் முப்படைகள் கூட்டாக இணைந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து அதிரடி ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில், 80 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி,

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 80 இந்திய விமானங்கள் ஈடுபட்டன. 5 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. 3 ரபேல் ஜெட் விமானங்கள், ஒரு மிக் -29 மற்றும் ஒரு எஸ்.யு-30 போர் விமானம் ஆகும். இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்த 24 மணி நேரமும் தயாராக இருந்த பாகிஸ்தான் ராணுவத்திற்கு பாராட்டுகள். வழக்கமான போரில் இந்தியாவை விட நாங்கள் சிறந்தவர்கள் என்பதை நேற்று இரவு காட்டினோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article