இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி!

2 hours ago 2

இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. கடற்பகுதிகளில் நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படை கப்பல்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவான 8000 எக்ஸ் தள கணக்குகளை முடக்க ஒன்றிய அரசு வலிவுறுத்தியுள்ளது. பாகிஸ்தானின் கராச்சி துறைமுகம் மீது இந்திய கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் விமானி கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் விமானி, ராஜஸ்தானின் ஜெய்சால்மர் பகுதியில் உயிருடன் சிக்கினார்.

ராஜஸ்தான் மாநிலம் கங்கா நகரில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் அத்துமீறலை அடுத்து ஸ்ரீநகர் விமான நிலையத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜம்முவில் நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை; பஞ்சாப் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் எல்லையோரம் உள்ள 5 மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டியின் மீதப்போட்டிகளை ஒத்திவைப்பது தொடர்பாக பிசிசிஐ நாளை முக்கிய முடிவு எடுக்கவுள்ளது. இதுவரை 57 போட்டிகள் முடிந்துள்ளன; மீதமுள்ள போட்டிகள் குறித்து நாளை முடிவு.

 

The post இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி! appeared first on Dinakaran.

Read Entire Article