
டெல்லி,
இந்தியாவை நோக்கி நேற்று 3-வது நாளாக டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியது. காஷ்மீர், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 26 நகரங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த டிரோன்களை இந்திய ராணுவம் நடுவானில் அழித்து வந்தது. முக்கியமான வான்பாதுகாப்பு அமைப்புகளை பலப்படுத்தியது.
இந்த நிலையில் பாகிஸ்தான் தாக்குதல்களில் S-400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புக்கு சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்த செய்திகளை தற்போது இந்திய ராணுவம் நிராகரித்துள்ளது.
வான்வழித் தாக்குதல் பாதுகாப்பு அமைப்பான S-400 சுதர்சன் சக்ராவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என இந்திய விமான படை விளக்கமளித்துள்ளது. S-400 சுதர்சன் சக்ரா பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு இந்திய விமான படை மறுப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் தவறான தகவலை பரப்பி வருவதாக இந்திய விமான படை குற்றஞ்சாட்டியுள்ளது.