இந்தியா வங்கதேசம் பலப்பரீட்சை; குவாலியரில் இன்று முதல் டி20 போட்டி: இரவு 7.00 மணிக்கு தொடக்கம்

3 months ago 20

குவாலியர்: இந்தியா – வங்கதேசம் மோதும் முதல் டி20 போட்டி, குவாலியரில் இன்று நடைபெறுகிறது. இந்தியா வந்துள்ள வங்கதேச அணி, முதலில் விளையாடிய டெஸ்ட் தொடரில் 0-2 என்ற கணக்கில் ‘ஒயிட்வாஷ்’ ஆனது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகளில் கொண்ட டி20 தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி குவாலியரில் இன்று இரவு நடைபெற உள்ளது. 2வது போட்டி டெல்லி (அக்.9), 3வது போட்டி ஐதராபாத்தில் (அக்.12) நடக்க உள்ளன. ரோகித், கோஹ்லி உள்ளிட்ட மூத்த வீரர்கள் டி20ல் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், பெரும்பாலும் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இந்த தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்த அணியில் ஹர்திக், சஞ்சு சாம்சன், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் இடம் பெற்றுள்ளனர்.

ஷான்டோ தலைமையிலான வங்கதேச அணியிலும் மஹமதுல்லா, மெஹிதி ஹசன், தன்ஸித் ஹசன், தவ்ஹித் ஹ்ரிதய், பர்வேஸ் உசைன் ஆகியோர் அதிரடி காட்ட உள்ளனர். ஜூலையில் நடந்த டி20 உலக கோப்பையில்
ஆஸ்திரேலியா, இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகளிடம் வரிசையாக தோற்ற வங்கதேசம், அதன் பிறகு இன்றுதான் டி20ல் களமிறங்குகிறது. இரு அணிகளுமே தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்புடன் உள்ளதால், ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

 

The post இந்தியா வங்கதேசம் பலப்பரீட்சை; குவாலியரில் இன்று முதல் டி20 போட்டி: இரவு 7.00 மணிக்கு தொடக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article