வாடிகன் சிட்டி: இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் மகிழச்சி அளிப்பதாக போப் லியோ தெரிவித்துள்ளார். கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக அமெரிக்காவை சேர்ந்த கர்தினால் ராபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட் கடந்த 8ம் தேதி இரவு தேர்வு செய்யப்பட்டார். அவர் போப் 14ம் லியோ என அழைக்கப்படுகிறார். இந்நிலையில் புதிய போப்பாக தேர்வு செய்யப்பட்ட பின் முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று போப் லியோ முதன்முறையாக நேற்று செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடியிருந்த மக்களிடையே உரையாற்றினார். அப்போது உலகம் முழுவதும் உள்ள தாய்மார்களுக்கு அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
பின்னர், “இன்று உலகையே நாசமாக்கும் மோதல்கள் 3ம் உலக போருக்கு சமம். மீண்டும் ஒருபோதும் போர் வேண்டாம். அன்பான உக்ரைன் மக்கள் அனுபவிக்கும் துயரங்களை நான் இதயத்தில் சுமக்கிறேன். காசாவில் உடனடி போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். பணய கைதிகள் விடுவிக்கப்பட்டு, மனிதாபிமான உதவிகள் கிடைக்க வழி செய்ய வேண்டும். இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் மகிழ்ச்சி தருகிறது. அதனை வரவேற்கிறேன்” என்று தெரிவித்தார்.
The post இந்தியா – பாக். போர் நிறுத்தம் மகிழ்ச்சி தருகிறது: போப் லியோ வரவேற்பு appeared first on Dinakaran.