'இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அணு ஆயுத போரை நிறுத்திவிட்டேன்' - டொனால்டு டிரம்ப்

4 hours ago 2

சண்டையை நிறுத்தாவிட்டால் இருநாடுகளுடனும் வர்த்தகம் செய்ய மாட்டேன் என எச்சரித்ததாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.வாஷிங்டன்,

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் தாக்குதல் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்த நிலையில், எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளை குறிவைத்து கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது. இந்த தாக்குதல் முயற்சிகளை இந்திய ராணுவம் தொடர்ந்து முறியடித்து வந்தது.

இந்த நிலையில், தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 10-ந்தேதி அறிவித்தார். இதை இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் உறுதி செய்தன.

இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அணு ஆயுத போரை நிறுத்திவிட்டதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

"இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அணு ஆயுத போரை நிறுத்திவிட்டேன். அணு ஆயுத போருக்கு இருந்த வாய்ப்பை தடுத்ததில் அமெரிக்கா முக்கிய பங்கு வகித்தது. சண்டையை நிறுத்தாவிட்டால் இருநாடுகளுடனும் வர்த்தகம் செய்ய மாட்டேன் என எச்சரித்தேன்.

மோதல் தொடர்ந்தால் வர்த்தகம் தொடராது என்று இரு நாடுகளிடமும் தெரிவிக்கப்பட்டது. வணிகத்தை பயன்படுத்தி போரை நிறுத்தியதில் என்னைப் போல் யாரும் கிடையாது. சண்டை நிறுத்தம் ஒன்றே தீர்வு என்பதை வலியுறுத்தினேன்."

இவ்வாறு டிரம்ப் தெரிவித்துள்ளார். 

Read Entire Article