
லண்டன்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லீட்சில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதனையடுத்து பர்மிங்காமில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ருசித்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நாளை மறுதினம் (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் இங்கிலாந்து 3-1 என்ற கணக்கில் வெற்றி பெறும் என்ற தனது கணிப்பு இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், "இந்த வாரம் இந்தியா ரொம்ப நன்றாக விளையாடியது.. சிறப்பான ஆட்டம்.. ஆனால் இங்கிலாந்து 3-1 என்ற கணக்கில் வெற்றி பெறும் என்ற என்னுடைய கணிப்பு இன்னும் உயிர்ப்புடன் இருக்க்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.