இந்தியா உள்பட 14 நாடுகளின் விசாக்களுக்கு தற்காலிகமாக சவுதி அரேபியா தடை விதித்துள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம், எகிப்து, ஈராக், இந்தோனேசியா, ஏமன் உள்ளிட்ட 14 நாடுகளின் விசாக்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டுக்கான ஹஜ் புனித யாத்திரை ஜூன் 4ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெறுகிறது. முறையாக பதிவு செய்யாமல் ஹஜ் புனித யாத்திரை செல்லும் தனி நபர்களை தடுப்பதற்காக சவுதி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. விதிகளை மீறுவோர் கண்டறியப்பட்டால் எதிர்காலத்தில் 5 ஆண்டு தடையை எதிர்கொள்ள நேரிடும் என்று சவுதி அரசு தெரிவித்துள்ளது.
The post இந்தியா உள்பட 14 நாடுகளின் விசாக்களுக்கு சவுதி தடை appeared first on Dinakaran.