இந்தியா - இங்கிலாந்து ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள்: ஜடேஜா புதிய சாதனை

3 hours ago 1

நாக்பூர்,

இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 47.4 ஓவர்களில் 248 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பட்லர் 52 ரன்களும், ஜேக்கப் பெத்தேல் 51 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் ஜடேஜா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 249 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்தியா பேட்டிங் செய்கிறது.

இந்திய ஆல் ரவுண்டரான ஜடேஜா, இந்த ஆட்டத்தில் கைப்பற்றிய 3 விக்கெட்டுகளையும் சேர்த்து இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் இதுவரை 42 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

இதன் மூலம் இந்தியா - இங்கிலாந்து இடையிலான ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 40 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை தகர்த்துள்ள ஜடேஜா புதிய சாதனை படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:-

1. ஜடேஜா - 42 விக்கெட்டுகள்

2. ஜேம்ஸ் ஆண்டர்சன் - 40 விக்கெட்டுகள்

3. பிளிண்டாப் - 37 விக்கெட்டுகள்

4. ஹர்பஜன் சிங் - 36 விக்கெட்டுகள்

5. ஜவகல் ஸ்ரீநாத் / அஸ்வின் - 35 விக்கெட்டுகள் 

Read Entire Article