நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார்

3 hours ago 2

சென்னை,

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பணியாற்றியவர் நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி. முண்டாசுப்பட்டி, மகாராஜா, சூரரை போற்று, ஜெய் பீம், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.  சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்ததால் இவரை சூப்பர் குட் சுப்பிரமணி என்று அழைத்தனர்.

இதற்கிடையில் புற்றுநோய் பாதிப்பால் நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்தார். அவருக்கு புற்றுநோய் பாதிப்பில் 4-வது கட்டம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இன்று இரவு மேற்கு மாம்பலத்தில் இருக்கும் அவரது இல்லத்திற்கு உடல் கொண்டுவரப்படும் எனவும் நாளை அவரது இறுதிச் சடங்கு சென்னையில் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Read Entire Article