இந்தியா-இங்கிலாந்து இடையேயான கிரிக்கெட் போட்டி: மெட்ரோவில் நாளை இலவச பயணம்

2 weeks ago 2


திருவொற்றியூர்: இந்தியா – இங்கிலாந்து டி-20 சர்வதேச கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு நாளை (25ம் தேதி) மெட்ரோவில் இலவச பயணம் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் இணைந்து, நாளை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இந்தியா – இங்கிலாந்து இடையேயான டி-20 சர்வதேச கிரிக்கெட் போட்டியை பார்வையிட வருபவர்களுக்கு தடையற்ற போக்குவரத்தை வழங்குவதற்காக மெட்ரோ ரயில் சேவையை நீட்டித்துள்ளது. நீட்டிக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவைகள்: கடைசி மெட்ரோ ரயில்: அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து விம்கோ நகர் பணிமனை மற்றும் விமான நிலையம் வரை செல்லும் கடைசி மெட்ரோ ரயில் இரவு 12 மணிக்கு புறப்படும்.

பச்சை வழித்தடத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகள் (ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், வடபழனி, அரும்பாக்கம், புரட்சித்தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ, கோயம்பேடு, திருமங்கலம், அண்ணாநகர் கோபுரம், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா, எழும்பூர்) சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் வழித்தடம் மாற்றம் செய்து கொள்ளலாம். பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு செல்லும் பயணிகள் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தில் (நடைமேடை 3) வழித்தடம் மாற்றம் செய்து கொள்ளலாம். பயணிகள் கடைசி மெட்ரோ ரயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஸ்பான்சர் செய்யப்பட்ட மெட்ரோ பயணம்: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கிரிக்கெட் போட்டிக்கான பயணச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு மெட்ரோ பயணங்களை ஸ்பான்சர் செய்கிறது.
* கிரிக்கெட் போட்டிக்கான நுழைவு சீட்டை பயன்படுத்தி போட்டி நடைபெறும் நாளில் பயணிகள் எந்த மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்தும் அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திற்கு இடையிலான சுற்று பயணத்தினை மேற்கொள்ளலாம்.
* டிஜிட்டல் மற்றும் அச்சிடப்பட்ட நுழைவு பயணச்சீட்டுகள் இரண்டும் தனித்துவமான க்யூஆர் குறியீடுகளைக் கொண்டுள்ளன, இதை பயன்படுத்தி மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம்.
* கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் நாளை ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post இந்தியா-இங்கிலாந்து இடையேயான கிரிக்கெட் போட்டி: மெட்ரோவில் நாளை இலவச பயணம் appeared first on Dinakaran.

Read Entire Article