இந்தியன் சேலஞ்சர் எலைட் மோட்டார் சைக்கிள்கள்

5 hours ago 2

இந்தியன் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம் சேலஞ்சர் எலைட் மற்றும் பர்சூட் எலைட் ஆகிய இரண்டு மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது. இவை இரண்டுமே லிமிடெட் எடிஷன்கள். எனவே, சேலஞ்சர் எலைட் 350 யூனிட்களும், பர்சூட் எலைட் 250 யூனிட்களும் மட்டுமே உற்பத்தி செய்யப்படும். இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும் 1,834 சிசி லிக்விட் கூல்டு வி-டிவின் இன்ஜின ்இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 126 எச்பி பவரையும், 181.4 என்மெ் டார்க்கையும் வெளிப்படுத்தும் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இடம் பெற்றுள்ளது.

7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் டிஸ்லிளே உள்ளது. ஆப்பிள் கார்பிளே, மியூசிக் கண்ட்ரோல், கீலெஸ் என்ட்ரி, அடாப்டிவ் எல்இடி ஹெட்லைட், குரூஸ் கண்ட்ரோல் உட்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தியாவிலும் விற்பனை செய்யப்படுமா என்ற விவரம் அறிவிக்கப்படவில்லை. விலை விவரமும் இடம்பெறவில்லை.

The post இந்தியன் சேலஞ்சர் எலைட் மோட்டார் சைக்கிள்கள் appeared first on Dinakaran.

Read Entire Article