இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 200 அப்ரன்டிஸ்

1 week ago 4

பணி விவரம்

1. Trade Apprentice:
பயிற்சியளிக்கப்படும் டிரேடுகள்: பிட்டர், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், எலக்ட்ரீசியன், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், மிஷினிஸ்ட். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் 2 வருட ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
2. Technician Apprentice:
பயிற்சியளிக்கப்படும் டிரேடுகள்: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், சிவில், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ். தகுதி: சம்பந்தப்பட்ட இன்ஜினியரிங் பாடத்தில் 3 வருட டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. Graduate Apprentice:
தகுதி: குறைந்தது 50% மதிப்பெண்களுடன் ஏதாவதொரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். வயது: 18 முதல் 24க்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி யினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிமுறைப்படியும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

31.01.2025 தேதியின்படி வயது வரம்பு கணக்கிடப்படும். இந்தியன் ஆயில் நிறுவனத்தின் விதிமுறையின்படி உதவித் தொகை வழங்கப்படும். ஆன்லைன் எழுத்துத் தேர்வு, கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள், சான்றிதழ் சரி பார்த்தல் ஆகியவற்றின் அடிப்படையில் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பதாரர்கள் டிரேடு அப்ரன்டிஸ் பயிற்சிக்கு www.apprenticeshipindia.org என்ற இணையதளம் மூலமாகவும், Technician Apprentice மற்றும் Graduate Apprentice பயிற்சிகளுக்கு www.nats.education.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.அதன்பின்னர் www.iocl.com/apprenticeship என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.02.2025.

The post இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 200 அப்ரன்டிஸ் appeared first on Dinakaran.

Read Entire Article